புத்தகம் மற்றும் பத்திரிகை வாசிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது தொழிநுட்பத்தின் அதீத பயன்பாடு காரணமாக பலரிடமும் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது.
இந்நிலையில் கேரள அரசு, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்படிஇ வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளி நேரத்தில் தனியான வகுப்பு ஒதுக்கப்படும் என்று கேரள கல்வித்துறை அமைச்சரான சிவன் குட்டி தெரிவித்துள்ளார். இதில் 01 முதல் 04 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாராந்திர உணர்வுகள் மூலமாக வாசிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் 05 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பத்திரிகை வாசிப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தை கொண்டுவரும் முன்பாக ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படுமென்றும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
0 Comments