Ticker

10/recent/ticker-posts

இந்தியாவின் சுதந்திர தினம் இன்று.

இந்தியாவின் 79 வது சுதந்திர தினம் இன்று (15) கொண்டாடப்படுகின்றது.




இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தேசிய தலைநகா் டெல்லியிலு ள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் முப்படைகளின் மரியாதையை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி, 12 வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி ஆற்றிய உரையில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தோருக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. தீவிரவாதத்துக்கு நிதியளித்து அதனை ஊக்கப்படுத்துவோரையும் அழிப்போம். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது. அணுசக்தி துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 


சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வந்த இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு எனது பாராட்டுக்கள். இந்தியாவுக்கு என்று விண்வெளி நிலையம் மிக விரைவில் நிறுவப்படும். 



வெளிநாடுகளினுடைய சமுக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சொந்த நாட்டின் சமூக வலைத்தளம் குறித்து நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.



சுதந்திர கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பல அடுக்குப் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments