2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரையும், சாதாரண தரப் பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரையும் நடைபெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது
இதேவேளை, பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைடைந்துள்ளது. இந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஊடாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிபர்கள் ஊடாக விண்ணிப்பிக்க முடியும் என்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது தேசிய அடையாள அட்டை ஊடாகவும் விண்ணப்பிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றில் வழிகாட்டல்களை அவதானித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் ஏற்கனவே குறித்த பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments