Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

 2025 ஆம் ஆண்டு GCE (A/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு குறித்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments