Ticker

10/recent/ticker-posts

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு 02 பதக்கங்கள்

 பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 04 நிமிடங்கள் 52.32 வினாடிகளில் நிறைவு செய்து நெத்மி கிம்ஹானி என்பவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

இப்போட்டித் தொடரில் இலங்கை வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும். இதேவேளை, ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த தங்கப் பதக்கத்தையும் வென்றார். 



போட்டியை நிறைவு செய்வதற்கு அவர் 03 நிமிடங்கள் 57.42 வினாடிகளை எடுத்துக் கொண்டார். ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஓர் இலங்கையர் வென்ற முதலாவது தங்கப் பதக்கமாக இது பதிவானது. 



இப்பதக்கத்துடன், இப்போட்டித் தொடரில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 02 ஆகவும் உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments