Ticker

10/recent/ticker-posts

2025 இற்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது

 இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு நேற்று (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு (BMICH) மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.




சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததான கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயற்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.



இவ்வருடம் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு, 'அழகான நாடு - புன்னகைக்கும் மக்கள்' என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விசேட அம்சம் ஆகும். 



'சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு', 'சுற்றுச் சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு', 'சுற்றுச் சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு ', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்', 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டப் பிரிவு', 'சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு', 'சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயற்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு', 'ஊடக பிரிவு' மற்றும் 'சமூக ஊடக பிரிவு' ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments