Ticker

10/recent/ticker-posts

உலகின் முதல் AI போர் விமானம்: விமானி, ஓடுதளம் தேவையில்லை

லகின் முதல் செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.


XQ-58A Valkyrie என்று அழைக்கப்படும் இந்த விமானம், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. மேலும், இது ஓடுதளம் (runway) தேவையில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் திறன் பெற்றது.

இந்த விமானமானது முழுமையாக AI தொழிநுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மனித விமானி இல்லாமல் தானாகவே பறக்க, தாக்குதல் நடத்த மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.
வழக்கமான போர் விமானங்களைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இவ்விமானம் எதிர்கால போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.

XQ-58A Valkyrie விமானம் stealth தொழிநுட்பம், விரைவான பறக்கும் திறன், தானாகவே முடிவெடுக்கும் AI செயற்பாடுகள் போன்ற பல முன்னேற்றங்களை கொண்டுள்ளது.

இது US Air Force மற்றும் US Navy ஆகியவற்றின் Skyborg திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விமானம் பாதுகாப்பு துறையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எதிர்காலத்தில், மனித விமானம் இல்லாமல் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய யுகம் தொடங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Post a Comment

0 Comments