Ticker

10/recent/ticker-posts

வடக்கு, கிழக்கில் கனமழை இன்னும் 02 நாட்கள் நீடிக்கும்.

வடக்கு, கிழக்கில் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் கனமழை மேலும் 02 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதென்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவரும் காலநிலை அவதானிப்பாளருமான பேராசிரியர் நா. பிரதீபராஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், "மட்டக்களப்பில் நேற்று மதியம் 01.00 PM வரையான 48 மணிநேரத்தில் 250 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நேற்று மதியம் 01.00 PM வரையான 36 மணி நேரத்தில் 125 MM மேற்பட்ட மழை வீழ்ச்சியும் பதிவாகின.

தொடர்ந்து 02 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நகர பிரதேசங்களை அண்மித்த - தாழ்நிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெள்ளம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையும் வங்காள விரிகுடாவில் புயலொன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் குறித்த காலப் பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும்.

இம்முறை மழையின் போக்கில் மிகப் பெரிய அளவிலான இடம் சார்ந்த வேறுபாட்டை உணர முடிகின்றது. குறிப்பாக அதிகளவிலான மழையைப் பெறுகின்ற வவுனியா மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மழையைப் பெற்றிருக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நுண் காலநிலை வேறுபாடுகளை நாம் உணரத் தொடங்கி இருக்கின்றோம்.

வடகீழ் பருவக்காற்று இன்னும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக காணப்படுகிறது. எதிர்பார்க்கும் மழை கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்."  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


Post a Comment

0 Comments