ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்ககாராவை மீண்டும் ஒரு முறை அந்த அணியின் நிர்வாகம் நியமித்துள்ளது.
கடந்த IPL சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயற்பட்டு வந்தார். பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகியதை அடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக குமார் சங்ககாரா செயற்பட்டு வருகின்றார். அவர் கடந்த 2021 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் செயற்படவுள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதன் X பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா, அடுத்த IPL சீசனில் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயற்படவுள்ளார் என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த IPL சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 14 போட்டிகளில் அந்த அணி வெறும் 04 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 09 வது இடம் பிடித்தது.

0 Comments