Ticker

10/recent/ticker-posts

வெளிநாட்டு பெண்ணுக்கு தனது அந்தரங்கத்தை காட்டியவருக்கு நேர்ந்த கதி

 திருக்கோவில் பிரதேசத்திற்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பென்னொருவரின் முன் நின்று, தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்த பொகவந்தலாவை குடும்பஸ்தரை நவம்பர் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நியூசிலாந்து பெண் சுற்றுலாப் பயணியொருவர் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியூடாக வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்ததார்.

இந்நிலையில் திக்கோவில் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர், குறித்த முச்சக்கர வண்டியை இடைமறித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்கள் மூலமாக வெளியிட்டதுடன், இவர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.


திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேக நபர், ஒரு பிள்ளையின் தந்தையான பொகவந்தலாவையைச் சேர்ந்தவர் என்றும் 25 வயதுடையர் என்றும், இவர் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடங்களாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.


இதனையடுத்து இவர் மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.











Post a Comment

0 Comments