வேலையில் ஏற்படும் சுமையை குறைக்க 10 நோயாளிகளை கொன்ற செவிலியருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ஜேர்மனியில் 44 வயதுடைய செவிலியர் ஒருவர் 2007 ஆம் ஆண்டில் செவிலியர் பயிற்சியை முடித்துள்ளார்.
அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டிலிருந்து மேற்கு ஜெர்மனியின் வுர்செலனிலுள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
டிசம்பர் 2023 ஆம் ஆன்டிலிருந்து 2024 மே மாதம் வரை இரவு நேரத்தில் (Night Shift) பணியாற்றி வந்த அவர், தனது பணிச் சுமையை குறைப்பதற்காக
வயதான நோயாளிகளுக்கு அதிகளவிலான வலி நிவாரணி மற்றும் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
மேலும், 27 பேரை கொலை செய்வதற்கும் முயற்சித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டில் 2024 ஆம் ஆண்டில் குறித்த செவிலியர் கைது செய்யப்பட்டார்.
அதிக பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளிடம் அனுதாபம் காட்டுவதற்கு பதிலாக அவர்களிடம் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த செவிலியருக்கு ஆயுள் தண்டனையாவ் தீர்ப்பாக விதித்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றத்தின் தீவிரம் கருதி, 15 வருடங்களுக்கு பின்னர் அவரை விடுவிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதே போல், 2019 ஆம் ஆண்டில் வடக்கு ஜெர்மனியில் 85 நோயாளிகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் செவிலியர் நீல்ஸ் ஹோகலினுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

0 Comments