தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் அழகிகள் அவமதிக்கப்பட்ட தாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
குறித்த போட்டியின் மேற்பார்வையாளர் இவ்வாறு அழகிகளை அவமதித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போட்டியில் கலந்து கொண்ட அழகிகளுக்கும் மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்தின் தலைவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட அழகிகளில் பெரும்பாலானோர் விளம்பரப் படங்களில் நடிப்பதில்லையென்று தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விளக்கமளிப்பதற்காக முன்வந்த மெக்சிகோ அழகியை முட்டாள் எனவும் அவர் திட்டியுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பெண்ணாகவும் மற்றும் மெக்சிகோ பிரதிநிதியாகவும் தன்னை மதிக்கவில்லை என்று கோபமுற்ற மெக்சிகோ அழகி, அறையை விட்டும் வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து, மெக்ஸிகோ அழகியைப் போல ஏனையவர்களும் அறையை விட்டு வெளியேறினால் போட்டியில் பங்கேற்க முடியாது என்று தலைவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், மெக்சிகோ அழகிக்கு ஆதரவாக மற்றைய நாடுகளை சேர்ந்த அழகிகளும் அறையை விட்டு வெளியேறியுள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்த அழகிகளின் வெளிநடப்பை தொடர்ந்து குறித்த போட்டியின் தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதனடிப்படையில், தாய்லாந்தில் போட்டி நிலைமையைக் கண்காணிக்க மூத்த நிர்வாகியை அனுப்பி வைக்க விருப்பதாக மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments