மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இப்பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று இத்திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் 1.00 PM மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளது.

0 Comments