Ticker

10/recent/ticker-posts

கிழக்கு முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு.

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற அசாதாரண காலநிலையினைக் கருத்திற் கொண்டு இம்மாதம் 26 இம் திகதி தொடக்கம் 30 வரை முன்பள்ளி பாாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளரான கே.ஜெயவதனன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச செயலகங்களின் முன்பள்ளி செயற்றிட்ட உத்தியோகத்தர்களுக்கும் இது தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments