24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலையானது 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (25) தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26) இதன் விலையானது அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போதைய தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலையானது 42,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலையானது 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

0 Comments