திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசதில் சுமார் 3000 ஏக்கர் வயல் நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியிலுள்ள, ஆயிலியடி, பக்கிரான்வெட்டை மற்றும் புளியடிகுடா ஆகிய வயல் நிலங்களை வெள்ளத்தினால் முழுமையாக மூழ்கியுள்ளன.
இதனால் கடன்பட்டு, செய்கை பண்ணப்பட்ட விவசாயம் அழிவுக்குள்ளாகி விவசாயிகள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக ஓயாமல் பெய்துவரும் கனமழையே இப்பாரிய அனர்த்தத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
"எமது விவசாய நிலங்கள் தற்போது கடலாக மாறியுள்ளன. இதனால், முளைத்த பயிர்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு தினங்களில் அழிந்து போகக் கூடிய அபாயம் உள்ளது," என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் அண்மையில்தான் விதைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, முளைத்து வந்த இளம்பயிர்களைப் பாதுகாக்க வழியின்றி தத்தளிப்பதாக விவசாயிகள் பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த துயரமான நிலையிலிருந்து மீள்வதற்கு அரசாங்கமே உதவ வேண்டும் என்று விவசாயிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments