Ticker

10/recent/ticker-posts

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான தொகை ஒதுக்கீடு.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியிலேயே நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் நிதி நிலைமைகளை ஸ்திரப்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

அரச சேவையை வினைத் திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல்வேறு மில்லியன் ரூபாய் நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்ற போது அவர்களின் விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாமென்றே பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதை தடுக்க வேண்டிய தேவையோ அல்லது நோக்கமோ அரசாங்கத்துக்கு கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 



Post a Comment

0 Comments