ஜெர்மனி நாட்டின் இராணுவத்தில் சுமார் 01 இலட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த நேரிடுமென்று ஜெர்மனி இராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வலிமையான இராணுவத்தை உருவாக்குவதற்கு ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்காக கட்டாய இராணுவ சேவை திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த இராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது
இது தொடர்பான மசோதா இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 10 வருடங்களுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இடதுசாரி கட்சியினர் குறித்த கட்டாய இராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

0 Comments