Ticker

10/recent/ticker-posts

கிண்ணியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு.

 கிண்ணியா தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையிலுள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர்.

இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த 55 மதிக்கத்தக்க திருமணமானவரின் சடலமாக இருக்கக்கூடும் என்று கிண்ணியா பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணையின் போது கண்டறிந்துள்ளனர்.

கிண்ணியா தோனாவில் கடலூர் முருகன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தனி நபரொருவருக்கு சொந்தமான கடையொன்றின் முன்னால் குறித்த சடலம் மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிகப்பு நிற சட்டையும், சாம்பல் நிற கருப்பு கோடு போட்ட சாரமும் அணிந்திருந்தார். அவருக்கு அருகில் செயற்கையாக அணியும் கால் ஒன்றை கழட்டி வைத்ததவாரே இருந்துள்ளார். அவர் ஊன்றிச் செல்லும் கை தாவல் ஒன்றும் சடலம் காணப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (15) இரவு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகின்றனர். காலையில் சடலத்தை கண்ணுற்ற சிலர் பொலிஸாருக்கு  தகவல் தகவல் வழங்கியதையடுத்து, அங்கு விஜயம் செய்த போலீசார் குறித்த  சடலத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments