Ticker

10/recent/ticker-posts

ஒரு மணி நேரத்தில் திருமணம். மணப்பெண்ணை கொலை செய்த மணமகன்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று (15) திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.


திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்திருந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் 01 மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கும், மணமகளுக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

முன்னரே, மாப்பிள்ளை சாஜனும், மணமகள் சோனியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பழக்கமானவர்கள். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று திருமண சேலை மற்றும், பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியை எடுத்து மணமகள் சோனியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். மேலும் சோனியின் தலையை சுவற்றில் வேகமாகவும் அழுத்தமாகவும் மோதியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளம்பெண் சோனி, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சோனியை கொலை செய்துவிட்டு சாஜன் என்பவரும் அங்கிருந்து தப்பியோடினார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து உரிய இடத்துக்கு வந்த பொலிஸார், உயிரிழந்த சோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள சாஜன் பரய்யாவை பொலிஸார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.

திருமண தினத்தன்று மணமகளை மணமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Post a Comment

0 Comments