கடந்த சில நாட்களாக லுத்துவேனியாவின் தலைநகரான வில்னியஸ் உட்பட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
ஹீலியம் பலூன்கள் மூலம் பெலாரசிலிருந்து போதைப்பொருட்கள், சிகரெட்டுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக லித்துவேனியா குற்றஞ்சாட்டி வருகின்றது.
இந்நிலையில், பெலாரஸுடனான எல்லையை லித்துவேனியா மூடியுள்ளது.
மர்ம பலூன்கள் பறக்கவிடப்படுவதை பெலாரஸ் தடுத்து நிறுத்தவில்லை என்றால் இரு நாட்டிற்குமிடையேயான வர்த்தம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படுமென்றும் லித்துவேனியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போரில் லித்துவேனியா உக்ரைனுக்கும் அதேவேளை பெலாரஸ் ரஷ்யாவுக்கும் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments