கடந்த 05 வருடங்களாக தேசிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி கடந்த 02 நாட்களாக குறித்த உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன், கடந்த முதலாம் திகதி காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்து வந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக குறித்த உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு செல்லாமையினால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமது பிள்ளைகளின் கல்வி வாழ்வில் 05 வருடங்களாக ஒளியேற்றி வந்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன், பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments