யுனெஸ்கோவின் (Unesco) மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலமாக உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (05) நடைபெறுகிறது.
இப்பயிற்சியை இலங்கையின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதி செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக, இலங்கையின் கடலோர மாவட்டங்களான மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 05 கிராம அலுவலர் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் பிரதான தேசிய ஒத்திகை பயிற்சி களுத்துறை மாவட்டத்தில் நடைபெறுகின்றது. இது இன்று (05) காலை 8.30 AM மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology), கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள் (இராணுவம், கடற்படை, விமானப்படை), பொலிஸ், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம், உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்கவுள்ளனர்.

0 Comments