Ticker

10/recent/ticker-posts

அமெரிக்காவின் நியூயார்க் நகர முதல் முஸ்லிம் மேயர் தெரிவு. டிரம்ப் விடுத்த எச்சரிக்கை.

அமெரிக்கா - நியூயோர்க் நகரத்தின் மேயராக ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா என்பவரும், முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோரும் போட்டியிட்டனர்.

ஒக்டோபர் 25 ஆம் திகதி தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஸோரான் மம்தானிதான், நியூயோர்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயராகவும், தென்னாபிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, ஸோரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குமிடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments