ஹிந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா உடல்நலக்குறைவால் இன்று (11) காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் தர்மேந்திரா உயிருடன் இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி தனது X பக்கத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்குப் பதிலளித்து குணமடைந்து வரும் ஒருவரைப் பற்றி பொறுப்பான சேனல்கள் எவ்வாறு தவறான செய்திகளைப் ஊடகங்களில் பரப்ப முடியும்? இது மிகவும் அவமரியாதை மற்றும் பொறுப்பற்ற செயலாகும். தயவு செய்து எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு உரிய மரியாதை கொடுங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில், "எனது தந்தை நலமுடன் உள்ளார்; குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னர், நேற்று (10) நடிகர் தர்மேந்திராவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு தர்மேந்திராவின் குடும்பத்தினர் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments