தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை (13) அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அரச துறையில் 34 வருடங்கள் பணியாற்றிய பின்னர், தான் பதவி விலகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க 2019 அக்டோபர் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார், அதன் பின்னர், இவர் தனது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதில் முன்னணிப் பங்காற்றியுள்ளார்.
கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்கு ஆதரவளித்த அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சமன் ஸ்ரீ ரத்நாயக்க தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

0 Comments