Ticker

10/recent/ticker-posts

மேலும் அதிகரித்த தங்கத்தின் விலை.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

இன்று (13) உலக சந்தையில் தங்கத்தின் விலையானது $4.212 ஐத் தாண்டியுள்ளது. 

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (13) ரூபாய் 10,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் காட்டுகின்றன.

இதன்படி, இன்று காலையில் கொழும்பு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலையானது ரூபாய் 310,800 ஆக அதிகரித்துள்ளது. இதன் நேற்றைய விலை ரூபாய் 301.500 ஆகும்.

இதற்கிடையில், நேற்று (12) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையானது ரூபாய் 326,000 ஆக காணப்பாட்ட நிலை இன்று ரூபாய் 336,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Post a Comment

0 Comments