Ticker

10/recent/ticker-posts

உயரப் போகும் வெங்காயம், உருளைக்கிழங்கின் விலை!

வரவிருக்கும் அறுவடை காலத்திலிருந்து விவசாயிகளிடம் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தை புதிய விலையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றிய இவர், அடுத்த அறுவடையிலிருந்து 01 Kg உருளைக்கிழங்கை 220 ரூபாவிற்கும், 01 Kg பெரிய வெங்காயத்தை 150 ரூபாவிற்கும் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் என்று தெரிவித்தார்.

இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை 01 Kg 200 ரூபாவுக்கும், 01 Kg உருளைக்கிழங்கின் விலை 300 ரூபாவுக்கும் உயரக்கூடும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் நோக்கில் இப்புதிய கொள்வனவு விலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.



Post a Comment

0 Comments