10 வது ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி – மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை ICC யினால் நேற்று (25) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இதன்படி, போட்டிகள் பெப்ரவரி 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தொடரின் முதல் நாளில்
பாகிஸ்தான் - நெதர்லாந்து,
மேற்கிந்திய தீவுகள் - பங்களாதேஷ்,
இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
குழு B யில்
இலங்கை அணியுடன் ஆஸி. அயர்லாந்து ஓமான் சிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இலங்கை அணி மோதும் முதலாவது போட்டி பெப்ரவரி 08 ஆம் திகதி அயர்லாந்து ஆகிய அணியுடன் நடைபெறவுள்ளது.
அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் மார்ச் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் கல்கத்தா அல்லது கொழும்பு மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளன. சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி மார்ச் 08 ஆம் திகதி அஹமதாபாத் அல்லது கொழும்பில் (பாகிஸ்தானின் தகுதியை பொறுத்து) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு மிகுந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் 2026 பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மொத்தமாக 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கையில் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் மற்றும் பல்லேகலை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பித்தக்கது.

0 Comments