Ticker

10/recent/ticker-posts

அரசு பல்கலைக்கழக உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான 16 புதிய திட்டங்கள்.

அரச பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான புதிய கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அரச பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 16 கருத்திட்ட முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் விதந்துரைக்கப்பட்டு அமுல்படுத்தும் பொருட்டு 2026 - 2030 ஆண்டுக்கான அரச முதலீட்டு திட்டத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு வசதியளிக்கும் வகையிலும், மாணவர்கள் பயில்கின்ற பாடநெறிகளுக்குப் பொருத்தமான வகையில் பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களை சர்வதேச தரமட்டத்திற்கு கொண்டு வருகின்ற நோக்கில், கீழ் குறிப்பிடப்படும் கருத்திட்டங்களை 2026-2030 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.

• மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கென்று பேராசிரியர் அலகொன்றை நிர்மாணித்தல், பூர்த்தி செய்தல் மற்றும் உபகரணங்களை விநியோகித்தல் - கருத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு 3,594.14 மில்லியன் ரூபாய்கள். 

• பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குதல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 26,625 மில்லியன் ரூபாய்கள். 

• பேராதனைப் பல்கலைக்கழக விடுதியின் புனரமைப்பு - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 2,452 மில்லியன் ரூபாய்கள். 

• வவுனியா பல்கலைக்கழகத்தினுடைய விடுதிக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு அலகொன்றை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 219 மில்லியன் ரூபாய்கள். 

• மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தூக்கான உத்தேச கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் பூர்த்தி செய்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 1,309.42 மில்லியன் ரூபாய்கள். 

• ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பல்மருத்து பீடம் மற்றும் துணைச் சுகாதார பீடத்துக்கான பல்நோக்கு கட்டிடமொன்றை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 3,419.38 மில்லியன் ரூபாய்கள். 

• ருஹுனு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கான உத்தேச கனக் கட்டமைப்பு எந்திரவியல் ஆய்வுகூடம் மற்றும் கடலோர மற்றும் துறைமுக எந்திரவியல் ஆய்வு கூடத்தினை நிறுவுவதற்காக குடியியல் மற்றும் சுற்றாடல் பொறியியல் துறையினுடைய கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 1,453.97 மில்லியன் ரூபாய்கள். 

• கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான மட்டக்களப்பு போதனா மருத்துவமனை பேராசிரியர் அலகை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 2,279 மில்லியன் ரூபாய்கள். 

• வவுனியா பல்கலைக்கழகத்தினுடைய பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிற்றுண்டிச்சாலையை விரிவாக்கம் செய்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 64 மில்லியன் ரூபாய்கள். 

• பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான சிற்றுண்டிச்சாலையினை விரிவாக்கம் செய்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 100 மில்லியன் ரூபாய்கள். 

• வவுனியா பல்கலைக்கழகத்தினுடைய மருத்துவ நிலையமொன்றை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 45 மில்லியன் ரூபாய்கள். 

• வவுனியா பல்கலைக்கழகத்துக்கான 02 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 474 மில்லியன் ரூபாய்கள்.

• ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்திற்கான ஆய்வுகூடம், வேலைத்தளம் மற்றும் விரிவுரைக்கான மண்டபங்களுடன் கூடிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 649.80 மில்லியன் ரூபாய்கள். 

• பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைச் சுகாதார பீடத்திற்கான ஆய்கூடத் தொகுதியினை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 405 மில்லியன் ரூபாய்கள். 

• ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்திற்கான ஆய்வுகூடத்தை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 2,342 மில்லியன் ரூபாய்கள்.

• இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்திற்கான 06 மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல் - கருத்திட்ட மதிப்பீட்டுச் செலவு 885.80 மில்லியன் ரூபாய்கள்.


0 Comments



Post a Comment

0 Comments