அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழுள்ள குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நாளை (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளினூடாக உரிய பயனாளிகள் இக்கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 616,346 முதியவர்கள் இக்கொடுப்பனவை பெற்றிருந்தனர்; இதற்காக அரசாங்கம் 3,081,730,000 ரூபாய்க்கும் (03 Billion) அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.

0 Comments