Ticker

10/recent/ticker-posts

அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் உஸ்தாத்மார் சங்க பொதுக்கூட்டம்

கண்டி தஸ்கரை பிரதேசத்தில் இயங்கிவரும் அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் ‘லஜ்னதுல் அஸாதிதா’ உஸ்தாத்மார் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை (17) அன்று இரவு 7.00 PM இற்கு கல்லூரியின் மஸ்ஜிதில் சிறப்பாக இடம்பெற்றது.

2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இச்சங்கம் கல்வி முன்னேற்றம், மாணவர் நலன் மற்றும் சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுக்கூட்டம்

குறித்த பொதுக் கூட்டம் 03 நலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டது:

1. கல்லூரியில் பணியாற்றும் உஸ்தாத்மார்களின் நலன் தொடர்பானவை.

2. மாணவர் நலன் தொடர்பில் எதிர் கால முன்னெடுப்புகள் தொடர்பானவை.

3. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ளல்.

ஒவ்வொரு அமர்விலும் கல்லூரியின் முன்னேற்றம், மாணவர்களின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாடு, அடுத்தாண்டிற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாகப் பேசப்பட்டன.

புதிய நிர்வாக சபை தெரிவு

03 வருட ஆட்சிக்காலத்தை கொண்ட குறித்த நிர்வாக சபைத் தெரிவும் அண்மையில் இடம் பெற்று இருந்தது. புதிய நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள்:

தலைவர்: அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். இஸ்ஸத் அலி (ஹக்கானி)

உப தலைவர்: அஷ்ஷெய்க் முஹைதீன் (நூரி)

செயலாளர்: அஷ்ஷெய்க் அஸ்கி அஹமட் (ஹக்கானி)

பொருளாளர்: அஷ்ஷெய்க் சமீர் (புர்கானி)

இவர்களுடன் 09 செயற்குழு உறுப்பினர்கள் ஆவர். இவர்களுடன், ஏனைய 55 உஸ்தாத்மார்கள் இச்சங்கத்தின் உறுப்பினர் களாக உள்ளதோடு, அல்ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். லபீர் (முர்ஸி),  அஷ்ஷெய்க் எம். இஸட்.எம். ரிபாத் (முர்ஸி), அஷ்ஷெய்க் எம்.கே.எம். அலி (தீனி) உயர்மட்ட ஆலோசனை உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய நிர்வாகத்தினர் எந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்? சமூக மற்றும் கல்வி நலத்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும்? உள்ளிட்ட தீர்மானங்களும் இக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments