கம்பஹாவின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் பேசியுள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
குறித்த மாணவி பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை விமர்சனம் செய்துள்ளார்.
குறித்த மாணவி கற்கின்ற பாடசாலை சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகளாக, தான் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச போட்டிகளிலும் குறித்த மாணவி தனது திறமையை வெளிப்படுத்தி இருந்ததாகவும் இதன்போது மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
பரிசளிப்பு விழாவின் ஒத்திகை நிகழ்வு ஒன்றுக்கு தான் வராத காரணத்தால் அதற்கு தண்டனையாக தனக்கு கிடைக்க வேண்டிய விருதினை அதிபர் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
விழா மேடையில் பாடசாலையின் அதிபரை விமர்சனம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

0 Comments