Ticker

10/recent/ticker-posts

திரையிசையின் இசைக் குயில் காலமானார்

சிங்களத் திரையிசையின் 'இசைக் குயில்' என்று அறியப்படும் லதா வல்பொல இன்று (15) தனது 91 வது வயதில் காலமானார். 

1934 ஆம் ஆண்டு இலங்கையின் கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 இல் தனது 12 வது வயதில் அன்றைய 'ரேடியோ சிலோன்' வானொலியில் தமது முதலாவது பாடலைப் பாடினார். 

அவர் இதுவரை 10,000 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் வெளிநாட்டு மொழிப் பாடல்களும் உள்ளடங்குகின்றன. 

1953 ஆம் ஆண்டு 'எதா ரே' திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான இவர், கடந்த பல தசாப்தங்களாக 600 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தமது குரலால் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1953 ஆம் ஆண்டு 'எதா ரே' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதித்த இவர், கடந்த பல தசாப்தங்களாக 600 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தமது குரலால் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments