பங்களாதேஷில் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி நடக்கவிருக்கும் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஸியாஉர் ரஹ்மான் மற்றும் பிரதமர் பேகம் காலிதா ஸியாவின் புதல்வர் தாரிக் ரஹ்மான் லண்டனிலிருந்து நேற்று (26) தாயகம் திரும்பியுள்ளார்.
2006 – 2008 காலப் பிரிவிலான இராணுவத்தினரின் ஆதரவுடனான ஷேக் ஹஸீனாவின் ஆட்சியில் இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வந்த நிலையில் 2008 இல் அவர் சிகிச்சைக்காக இலண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். 17 வருடங்களின் பின்னர் அவர் முதன்முறையாக நேற்று (26) தனது மனைவி மற்றும் மகளுடன் பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஹ்ஜலால் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
02 கிலோ மீட்டர் தூரம் வரை திரண்டிருந்து அவரை வரவேற்பதற்கு ஆதரவாளர்களுக்கு மத்தியில் 04 மணித்தியாலங்கள் பயணம் செய்து அவர் தனக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை அடைந்தார். அங்கு மக்களின் முன்னாள் அவர் உரையாற்றும் போது ஒரு தாயினது கனவாக பங்களாதேஷை கட்டமைக்கவுள்ளதாக பேசியுள்ளார்.
பங்களாதேஷின் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றான பங்களாதேஷ் தேசிய வாதக் கட்சியின் (BNP) தலைவரான 60 வயது தாரிக் ரஹ்மான் எதிர் வருகின்ற தேர்தலுக்கான அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய வேட்பாளராகக் கருதப்படுகின்றார்.

0 Comments