வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 PM மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அத்திணைக்களம் தெரிவிததுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 MM அளவான ஓரளவு பலத்த மழை பொழியக் கூடும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக் கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 Comments