Ticker

10/recent/ticker-posts

திருமணம் முடித்த மூன்றே நாட்களில் மணப்பெண் கொடுத்த ஷாக்: அதிர்ச்சியில் குடும்பம்

இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 01 வருடமாக காதலித்து திருமணம் நடந்த மூன்றே நாட்களில் மணப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்ததால் புது மாப்பிள்ளை மற்றும் அவருடைய பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியாவின் நாமக்கல் மாவட்டத்தில் ஸ்ரீதர், மகாஸ்ரீ இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் கடந்த 01 வருடத்துக்கு முன்னர் நட்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடை பெற்றது.

தம்பதியர் தங்களது இன்ஸ்டாகிராமில் தங்களுடைய திருமண நிகழ்ச்சி விழா போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே, மகா ஸ்ரீ இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் மூலமாக அறிந்த முதல் கணவரின் உறவினர்கள், குறித்த புதுமண தம்பதியரை தீவிரமாக தேடி மாப்பிள்ளை வீட்டாருக்கு காரில் வந்து புது மணப்பெண் மகாஸ்ரீயை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் குடியிருப்போர் தாக்குதல் நடத்தியோரிடம் வந்து விசாரித்த போது கடந்த 18 வருடத்திற்கு முன்பே மகா ஸ்ரீ என்பவர் திருமணம் செய்ததுடன், அவருக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தையும், 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே திருமணமான விடயத்தை மறைத்தும், தனது வயதை குறைத்தும் கூறி ஏமாற்றி திருமணம் செய்தது அவ்விடத்திலேயே அம்பலமானது.

மேலும், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மகாஸ்ரீயின் பெற்றோர்கள் பராமரிப்பில் இருந்து வரும் இரண்டு குழந்தைகளையும், முதல் கணவரின் உறவினர்கள் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புது மாப்பிள்ளை ஸ்ரீதரும், அவருடைய குடும்பத்தினரும், புதுப் மணப்பெண் மகா ஸ்ரீ ஏற்றுக் கொள்ள மறுத்து, ஸ்ரீதர் கட்டிய 05 பவுன் தாலிக் கொடியையும் திரும்ப பெற்றுக் கொண்டு அவரை வீட்டை விட்டும் அனுப்புயுள்ளனர்.


Post a Comment

0 Comments