திருகோணமலையில் இருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் களுத்துறையில் இருந்து காலி மற்றும் மாத்தறையூடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பரப்புகளிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பொழியக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையில் இருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 25 KM - 35 KM வரை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
ஆழமான தாழமுக்கம் தொடர்பான ஆலோசனை - ('தித்வா' புயலின் எச்சம்):
இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் 2025 டிசம்பர் 02 ஆம் திகதி 4.30 PM மணி வரை செல்லுபடியாகும் வகையில் 2025 டிசம்பர் 02 ஆம் திகதி 04.30 AM மணியில் வெளியிடப்பட்டது.



0 Comments