பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நில ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக டாக்காவிலுள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனையை தீர்ப்பாக விதித்துள்ளது.
அதே வழக்கில், ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு 07 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவருடைய மருமகளும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினருமான துலிப் சித்திக் என்பருக்கு 02 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 14 பேருக்கும் தலா 05 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மொத்தமாக 17 குற்றவாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக 06 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2025 நவம்பர் 27 ஆம் திகதி, இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது மற்றொரு பங்களாதேஷ் நீதிமன்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கும் முன்னதாக idampetrae கலவரத்தின் போது மனிதகுலத்திற்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்து நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்திய வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வருடம் ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஆட்சியை இழந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் இந்தியாவை வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments