இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கொமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய என்பவர் லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்ற போது, விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
இவருடைய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கொமாண்டர் பதவி நிலையிலிருந்து குரூப் கேப்டன் (Group Captain) பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவருடைய உடல் இன்று (02) லுனுவில இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2025 டிசம்பர் 02, மாலையில் இரத்மலானையிலுள்ள இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இவருடைய இறுதிச் சடங்குகள் விமானப் படையின் முழு மரியாதையுடன் எதிர்வரும் 2025 டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments