ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை புதியதொரு உரிமையாளர் அடிப்படையிலான T20 லீக் தொடரான, ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடரை அறிவித்துள்ளது.
05 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் சீசன், 2026 ஒக்டோபர் மாதளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இவ்வாறானதொரு ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக்கை (APL) அறிமுகப்படுத்தியிருந்தது.
05 அணிகளுடன் ஒரேயொரு சீசன் மட்டுமே அப்போது விளையாடப்பட்டது. இத் தொடரில் கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கலம், ஷஹித் அப்ரிடி போன்ற பிரபல வீரர்கள் பலர் விளையாடினர்.
ஆயினும், ஊதியப் பிரச்சினைகள் மற்றும் லீக் போட்டியின் நம்பகத்தன்மை தொடர்பான சிக்கல்கள் எழுந்ததைத் தொடர்ந்து இத்தொடர் கைவிடப்பட்டது.
அதே பெயரிலான இப்புதிய லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு 2026 ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஆரம்ப சீசனில் 05 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments