சவூதி அரேபியா என்றால் நம் கண்ணுக்கு பாலைவனமும், கொளுத்தும் வெயிலும்தான் ஞாபகத்துக்கு வரும்.
ஆனால், அத்தோற்றத்தையே மாற்றும் வகையிலான ஒரு காட்சி தற்போது அங்கு காணப்படுகின்றது. சவூதி அரேபியாவின் மலையொன்றில் பனி பெய்து, அது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றைப் போன்று காட்சியளிக்கிறது.
சவூதி அரேபியாவின் Tabuk பகுதியில் அமைந்துள்ள Jabal al-Lawz என்னும் மலையில் பனி பொழிந்து அங்கு வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் சென்றுள்ளது.
அது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிட்டுள்ள இணையவாசிகள், இது உண்மையா அல்லது AI யால் உருவாக்கப்பட்ட காட்சியா? என்று வியக்கின்றனர்.


0 Comments