Ticker

10/recent/ticker-posts

ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் கண்டுபிடிப்பு.

 உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்றாக தங்கம் காணப்படுகின்றது. இத்தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா காணப்படுகிறது. அதே சமயம் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து 03 வது இடம் வகிக்கின்றது.

இந்நிலையில், மேலும் பல தங்கப் படிமங்களை கண்டுபிடிப்பதற்கு சீனா ஆர்வம் காட்டி வருகின்றது. இதன்படி தற்போது ஷான்டாங் மாகாணம் லைஜோ நகரின் கடலுக்கடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை சீனா கண்டறிந்துள்ளது. இதன் மொத்த தங்க இருப்பு சுமார் 39 இலட்சம் கிலோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த தங்க கையிருப்பில் 26 சதவீதமாகும். எனவே, லைஜோ பகுதியானது சீனாவின் தங்க இருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments