Ticker

10/recent/ticker-posts

17 ஆண்டுகளுக்கு பின்னர் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நுவரெலியா உறைபனியால் மூடப்பட்டுள்ளது.

இன்று வௌ்ளிக்கிழமை (23) காலை நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட அம்பெவல, பட்டிபொல மற்றும் லோகனம்த பகுதிகளில் சுமார் ஒரு சென்றி மீட்டர் வெள்ளை உறைபனி காணப்பட்டது.

05 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான கடுமையான குளிர் நிலவியது. இந்த சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, காலை 7.00 AM மணி வரை முழு சூழலும் வெள்ளை நிறத்தில் மூடப்பட்டிருந்தது. அத்தோடு, கடுமையான குளிரும் காணப்பட்டது.

இந்த அரிய காட்சியைக் காண நுவரெலியாவைச் சேர்ந்த பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காலை 6.00 AM மணிக்கு நுவரெலியா நகரத்திற்கு வருகை தந்தனர்.



Post a Comment

0 Comments