Ticker

10/recent/ticker-posts

பதவியை இராஜிநாமா பல்கேரியா ஜனாதிபதி

பல்கேரியா ஜனாதிபதி ராதேவ் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார்.

பல்கேரியாவில் கம்யூனிஸ் ஆட்சி மறைந்து ஜனநாயகம் மலா்ந்த பின்னர், ஒரு ஜனாதிபதி தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே விலகுவது இதுவே முதன் முறையாகும்.

இவருடைய இராஜிநாமா கடிதம் அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டதென்றும், அவருக்குப் பதிலாக துணை ஜனாதிபதியான இலியானா யோடோவா தற்காலிகமாக பொறுப்பேற்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் பல்கேரியா, கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமாா் 08 முறை பாராளுமன்றத் தோ்தல்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments