'கோமாளி' திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்தாக 'லவ் டுடே, டிராகன், டியூட்' என்று ஹிட் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரதீப் ரங்கநாதன்.
இவருடைய நடிப்பில் அடுத்த திரைப்படமாக 'எல்.ஐ.கே.' படம் வெளியாகவுள்ளது. மேலும் சில புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனிடம், 'இயக்குனர் அல்லது நடிகர். இதில் எது பிடித்திருக்கிறது? எதில் உங்கள் கவனம் இருக்கிறது?' என்று கேட்கப்பட்டது.
அதற்கு, "இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ''இயக்குனர் ஆக மாட்டேன் என்று சொல்ல முடியாது. நல்ல கதை ரெடியாகி விட்டது என்றால் இயக்குனராக என்னை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றையும் சூழ்நிலைதான் உருவாக்கும். ஒரு கதை என் மனதில் இருக்கிறது. அதில் பாதியை எழுதி முடித்திருக்கிறேன். அது முடிந்ததும் முடிவை சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

0 Comments