சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்குமிடையில் பாலத்தினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தற்போது அங்கு போக்குவரத்துக்காக படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல குளங்களில் வெள்ள நீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கவுகள் அந்தந்த நீர் மட்ட அளவுகளுக்கேற்ப திறந்து விடப்பட்டுள்ளது.
அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களான உன்னிச்சை, நவகிரி, தும்பங்கேணி, றூகம், கட்டுமுறிவு, வாகனேரி, வெலிகந்தை, வடமுனை, புனானை, மாவடி ஓடை போன்ற குளங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உன்னிச்சை குளத்தின் இரண்டு வான் கதவுகள் 03 அடிக்கும் ஒரு வான்கதவு 04 அடிக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.
குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த குளங்களை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் வௌ்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x

0 Comments