லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025 இல் பதிவான தகவல்களின்படி, இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக மாறாமல் உள்ளது.
கடந்த வருடம் ஜூலை முதல் ஒக்டோபர் 2025 வரை எவ்வித விலைத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், அண்மைய விலைத் திருத்தத்தில் அதிகரிப்பு இறுதியாக கடந்த ஜூலை 2025 க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையில், லாஃப் எரிவாயு நிறுவனம், நேற்று (01) முதல் விலைகளை அதிகரிப்பத ற்கு நடவடிக்கை எடுத்ததாக அறிவித்தது.
இதன்படி, 12.5 Kg லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 150 அதிகரித்த்துடன், அதன் புதிய விலை ரூபாய் 4,250 ஆகும்.
05 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 65 அதிகரித்து, அதனுடைய புதிய விலை ரூபாய் 1,710 என்று லாஃப் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

0 Comments