Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு. ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது பாரியளவில் அதிகரித்துள்ளது. இதற்கமைய, உலக பிரதான சந்தையில் தங்கத்தின் விலை 4,729 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதுடன், வெள்ளி அவுன்ஸ் ஒன்றின் விலையானது 95.86 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது வேகமாக அதிகரிப்பது அவதானிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8. 00 மணியுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டில் தங்கத்தின் விலையானது 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 

இதன்படி, இன்று பிற்பகல் கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 342,200 ரூபாவாகக் காணப்பட்டது. 

இதேவேளை, நேற்று 368,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது இன்று 370,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments