ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதனுடைய தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை 2026 ஜனவரி 09 ஆம் திகதியன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படம், தயாரிப்பு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த இரசிகர்களின் உற்சாகத்தையும், உணர்வுகளையும் தயாரிப்பு குழு புரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளதுடன், இம்முடிவு எளிதான ஒன்றல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளது. திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரசிகர்கள் பொறுமையுடன் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு தயாரிப்பு நிறுவனம் வேண்டியுள்ளது. இரசிகர்களின் நிலையான ஆதரவே ஜனநாயகன் திரைப்படக் குழுவின் மிகப் பெரிய பலமாகும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

0 Comments